போட்டித்தேர்வு திறன்
மேம்பாடு மாணவருக்கு பயிற்சி
அரசு
பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்,
போட்டி தேர்வுகளில் பங்கேற்கும் திறனை மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை சிறப்பு பயிற்சித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அவ்வகையில், நாடு மற்றும் மாநிலம்
முழுவதும் உள்ள புகழ்பெற்ற கல்லுாரிகளில் சேர்க்கை
பெறுவதற்கான வாய்ப்பும் உறுதி
செய்யப்படவுள்ளது.
அதன்படி,
இத்திட்டத்தின் கீழ்,
‘தேர்வு தயாரிப்பு வினாடி
வினாக்கள‘ என்ற இணைய
தளத்தை உருவாக்கியுள்ளது. மாணவர்களின் செயல்திறனை மேம்படுத்தும் வகையிலும்,
மாணவர்கள் பயிற்சி செய்யவும்
இது உதவுகிறது.அனைத்து
அரசுப்பள்ளி ஹைடெக் ஆய்வகத்தில், இந்த வினாடி வினாக்கள்
கிடைக்கும்.
இந்நிலையில், உடுமலை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில், கல்வி நோக்கத்திற்காக ஆய்வகங்களை அணுக, ஆர்வமுள்ள மாணவர்களுக்கு தலைமையாசிரியர்கள் உதவுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி
மாணவர்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு போட்டி, நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்ள தயாராக
இந்த முயற்சி உதவும்.
மாணவர்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்த, சுழற்சி
அடிப்படையில் உயர்
தொழில்நுட்ப ஆய்வகங்களில் அந்தந்த
பாட ஆசிரியர்கள் இருக்க
வேண்டும். வாரம்தோறும் செவ்வாய்,
சனி ஆகிய கிழமைகளில், அறிவிக்கப்பட்ட பாடங்களில் இருந்து பயிற்சி அளிக்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


