யூ டியூப் சேனல்’ தொடங்க பயிற்சி வகுப்பு நடத்தவிருப்பதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் \”யூடியூப் சேனலை உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 16.10.2024 முதல் 18.10.2024 வரை மூன்று நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிட வளாகத்தில் நடை பெற உள்ளது.
“சொந்தமாக யூடியூப் சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு-ஆன்லைன் மார்க்கெட்டிங்-டொமைன் பெயர்-ஹோஸ்டிங்-இணையதள வடிவமைப்பு நுட்பங்கள், சைபர் குற்றம், பாலிசி மற்றும் விதிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பாக நேரடி பயிற்சி வகுப்பின் மூலமாக கற்றுக் கொடுக்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சியில் பங்கு பெறும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் தங்கி பயில்வதற்கு ஏதுவாக குறைந்த கட்டண வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது. தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து முன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், இப்பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.தமிழ் நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை-600 032. 8668 100181, 9841 336033 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவு அவசியம். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram

