தமிழக அரசு
பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி
வகுப்புகள்
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான 3 நாள் பயிற்சி
வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த
வகுப்புகளில் கலந்து
கொள்ள அரசு உயர்
மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களை பரிந்துரை செய்ய பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு சத்துணவு திட்டத்துறை, பெங்களூரு
The National Institute of Mental Health and Neuro Science-யின்
Psychiatric Science Work துறையுடன் இணைந்து Drug Demand
Reduction Program என்ற தலைப்பில் ஆளுமை
திறனை வளர்ப்பதற்கு 3 நாட்கள்
பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த
பயிற்சி வகுப்புகள் பெங்களூரு
அலுவலகத்தில் பிப்ரவரி
மாதம் இறுதி வாரத்தில்
நடைபெற உள்ளது.
இந்த
பயிற்சியில் கலந்து கொள்ள
மாவட்டங்களில் மொத்தம்
200 ஆசிரியர்களை பரிந்துரை செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த
பயிற்சி வகுப்புகள் 40 பேர்
கொண்ட குழு மூலமாக
நடத்தப்படுகிறது. அந்த
பயிற்சியில் கலந்து கொள்ள
வரும் ஆசிரியர்களுக்கு பயணக்கட்டண தொகையாக ரூ.1500 வழங்கப்படும். மேலும் தங்கும் இடம்
மற்றும் உணவு போன்றவை
நிறுவனத்தின் செலவில்
வழங்கப்படும் எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்காக தமிழகத்தில் உள்ள அரசு
உயர் மற்றும் மேல்நிலை
பள்ளிகளில் பணிபுரிந்து வரும்
பட்டதாரி ஆசிரியர்களின் விவரங்களை
குறிப்பிட்ட விண்ணப்பத்தில் பூர்த்தி
செய்து பிப்ரவரி
27
ஆம் தேதிக்குள் அனுப்ப
வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை v2sec.tndse@nic.in என்ற
மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
மேலும்
அனைத்து மாவட்ட முதன்மை
கல்வி அலுவலரும் கையொப்பமிட்டு அறிக்கையை விரைவு மின்னஞ்சல் மூலமாக அனைத்து மாவட்ட
கல்வி அலுவலருக்கு அனுப்ப
வேண்டும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


