கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் – தர்மபுரி
கல்வி
தொலைக்காட்சியில், போட்டி
தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இது குறித்து தர்மபுரி மாவட்ட கலெக்டர் திவ்யதர்ஷினி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால், கல்வி
தொலைக்காட்சியில் போட்டித்
தேர்வுகளுக்கான பயிற்சி
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அத்துடன்,
ஊக்க உரைகள், முந்தைய
ஆண்டுகளின் வினாத்தாள் பற்றிய
கலந்துரையாடல் மற்றும்
நடப்பு நிகழ்வுகள் குறித்து,
பல்வேறு நிகழ்ச்சிகளை தினமும்
காலை 7 மணியிலிருந்து 9 மணி
வரையும், இதன் மறு
ஒளிபரப்பு இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரையும் செய்யப்படுகின்றன.
தர்மபுரி
மாவட்டத்தில் உள்ள
போட்டித்தேர்விற்கு தயாராகும்
நபர்கள், கல்வி தொலைக்காட்சியில் இலவச பயிற்சி
வகுப்பினை பார்த்து பயன்பெறலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


