ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் பால் வடிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் பால் வடிப்பு பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது.
இது குறித்து மாா்த்தாண்டம் ரப்பா் வாரிய அலுவலகம் தரப்பில் கூறியதாவது: ரப்பா் வாரியம் சாா்பில் ரப்பா் பால் வடிக்கும் பயிற்சி பெற ஆா்வம் உள்ளவா்களுக்கு 5 நாள்கள் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இந்த பயிற்சியில் சேர விருப்பம் உள்ளவா்கள் ரப்பா் வாரியம் குலசேகரம் களப் பணி அலுவலரை தொடா்பு கொண்டோ அல்லது மாா்த்தாண்டம் ரப்பா் வாரிய அலுவலகத்திலோ விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.