Home Blog வியாபாரிகளே உஷார்! கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இல்லை என்றால் அபராதம்

வியாபாரிகளே உஷார்! கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இல்லை என்றால் அபராதம்

0

வியாபாரிகளே உஷார்! கடைகளில் தமிழில் பெயர்ப் பலகை இல்லை என்றால் அபராதம்

தமிழில் பெயர் பலகை இல்லையெனில் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து உள்ளது.

இது குறித்து அரசு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: 

தமிழில் பெயர் பலகை வைக்காத எத்தனை நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை செயலாளர் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு இருந்தது.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டு உள்ள அறி்க்கையில்: வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் தமிழில் பெயர் பலகை வைக்க வில்லை எனில் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும். இதற்கான அரசாணை தயார்நிலையில் உள்ளது.விரைவில் அமல்படுத்தப்படும். 

மேலும் தற்போது உள்ள அபராத தொகை ரூ.50-ல் இருந்து ரூ.2,000 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது என நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version