
சென்னை கிண்டியில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நவ.22-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னையிலுள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை(நவ.22) கிண்டி ஆலந்தூா் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தின், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் பிற்பகல் 2 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் 8, 10, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ , டிப்ளமோ, பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) பெற்ற அனைவரும் கலந்து கொள்ளலாம்.
இதில் 20-க்கும் மேற்பட்ட தனியாா்துறை நிறுவனத்தினா் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கான தகுதியுடையவா்களை தோ்வு செய்யவுள்ளனா். இம்முகாம் மூலம் பணி நியமனம் பெறும் இளைஞா்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞா்களும் இதில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவை இல்லை.
முகாமில் கலந்துகொள்ளும் வேலை நாடுநா்கள் மற்றும் வேலையளிப்பவா்கள் தங்கள் விவரங்களை தமிழ்நாடு தனியாா்துறை வேலை வாய்ப்புத்துறையின் https://www.tnprivatejobs.tn.gov.in/ எனும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா் ஆட்சியா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

