குறும்பட போட்டிக்கு படங்களை அனுப்ப இன்று
கடைசி நாள்
இந்தியன்
வங்கி – அலகாபாத், ‘இந்து
தமிழ் திசை’ நாளிதழ்
ஆகியவை இணைந்து ‘சுதந்திர
இந்தியா@75: நேர்மையுடன் கூடிய
தற்சார்பு’ எனும் கருப்பொருளில், ஊழல் எதிர்ப்பு குறித்த
சமூக விழிப்புணர்வைப் பரப்பும்
நோக்குடன் கல்லூரி மாணவர்களுக்கான குறும்படப் போட்டியை நடத்துகின்றன.
இந்தப்
போட்டிக்கான கடைசி நாள்
நேற்றுடன் முடிவடைந்த நிலையில்,
மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, இன்று
ஒருநாள் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
‘ஊழலை
ஒழிப்பதற்கான விழிப்புணர்வு’ எனும் தலைப்பில் நடத்தப்படும் இந்தப் போட்டிக்கான குறும்படங்கள் 2 நிமிடங்களுக்குள் ஆங்கில
மொழியில் இருக்க வேண்டும்.
ஹரிஜாண்டல் கேமரா பயன்முறையில் படமாக்கப்பட்டிருக்க வேண்டும்.
பின்னணி இரைச்சல் ஏதுமின்றி,
நல்ல ஒலித் தரத்துடன்
குறும்படம் இருக்க வேண்டும்.
மாணவரின்
பெயர், கல்லூரி பெயர்
மற்றும் முகவரியைக் குறிப்பிட்டு, குறும்படங்களை இன்றைக்குள் (October 26) கிடைக்கும்படி, ib.vigilweek@hindutamil.co.in என்ற
மின்னஞ்சலுக்கு அனுப்ப
வேண்டும்.