TAMIL MIXER EDUCATION.ன்
TNPSC செய்திகள்
TNPSC
Group
4 தேர்வுக்கான Key Answer.ல் ஆட்சேபனை
தெரிவிக்க இன்று கடைசி
நாள் – அக்டோபரில் ரிசல்ட்
TNPSC Group 4 தேர்வுக்கான Key Answer.ல் ஆட்சேபனைகளை இன்று மாலை வரை
தெரிவிக்கலாம்.
அக்டோபரில் தேர்வுக்கான ரிசல்ட் வெளியிட
டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம்(TNPSC)
குரூப் பதவியில் காலியாக
உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த
மாதம் 24ம் தேதி
நடத்தியது.
இத்தேர்வை
18.50 லட்சம் பேர் எழுதினர்.
இதனால், ஒரு பதவியை
பிடிக்க 253 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால்
கட் ஆப் மதிப்பெண்
உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் குரூப்
4 தேர்வுக்கான கீ ஆன்சரை
TNPSC தனது இணையதளத்தில் கடந்த வாரம் வெளியிட்டது. அதாவது, வினாத்தாள்களுடன் கூடிய
உத்தேச விடைகள் வெளியிடப்பட்டது.
உத்தேச
விடைகள் மீது மறுப்பு
ஏதேனும் இருப்பின் தேர்வாணைய
இணைய தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வார காலத்திற்குள், அதாவது ஆகஸ்ட் 8ம்
தேதி மாலை 5.45 மணி
வரை தெரிவிக்கலாம் என்று
டிஎன்பிஎஸ்சி அறிவித்தது.
இதைத்
தொடர்ந்து தேர்வு எழுதியவர்கள் தாங்கள் விடை சரியாக
இருக்கிறதா? ஏதேனும் ஆட்சபைனை
இருக்கிறதா? என்பதை சரிபார்த்து வந்தனர். இந்த நிலையில்
டிஎன்பிஸ்சி அறிவித்த கால
அவகாசம் இன்று மாலை
5.45 மணியுடன் முடிகிறது. ஆட்சேபனைகளை www.tnpsc.gov.in என்ற
மின்னஞ்சல் மூலமாக அனுப்ப
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வர்கள் ஏதேனும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தால் அது வல்லுனர்
குழுவுக்கு அனுப்பப்படும். அந்த
குழு ஆய்வு செய்து
அதற்கான சரியான விடையை
வெளியிடும். தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடரும்.
அக்டோபர் மாதத்தில் ரிசல்ட்
வெளியிட TNPSC
திட்டமிட்டுள்ளது. நவம்பர்
மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். கலந்தாய்வு நவம்பர்
மாதம் தொடங்கும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


