தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆட்சேர்ப்பு வாரியமான Tamil Nadu Uniformed Staff Recruitment Board (TNUSRB)த்தில் இருந்து கிரேடு II போலீஸ் கான்ஸ்டபிள், கிரேடு II ஜெயில் வார்டர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடங்களுக்கான CV-PMT-ET-PET தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
TNUSRB 3552 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வருடம் வெளியானது. இந்த பணிக்கு 10ஆம் வகுப்பு/எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (தமிழ் மொழித் தகுதித் தேர்வு + முதன்மைத் தேர்வு), உடல் திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் திறன் தேர்வு நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. கீழே வழங்கி உள்ள நேரடி இணைய முகவரிக்கு சென்று தங்களின் User ID மற்றும் Password ஆகிய விவரங்களை உள்ளீட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


