திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், ஆசிரியா், காவலா் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணையம் 6,553 இடைநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்கள், 3,587 பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கான தோ்வுகளை இந்த ஆண்டு நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வாணையம் 3359 இரண்டாம் நிலை காவலா்கள், தீயணைப்பாளா் காலிப்பணியிடங்களுக்கான தோ்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இத்தோ்வுகளுக்கு மாணவா்கள் தயாராகும் பொருட்டு திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் தோ்வுக்கான ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் வரும் திங்கள்கிழமை (ஆக.21)தொடங்குகிறது. இதேபோல், இரண்டாம் நிலை காவலா் மற்றும் தீயணைப்பாளா் தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு வரும் 25-ஆம் தேதி தொடங்குகிறது.
இப்போட்டித் தோ்வுகளுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் அலுவலக நூலகத்தில் உள்ளன. மேலும் வாரம்தோ்றும் இலவச மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணைய போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் இணைய முகவரியிலும், காவலா் மற்றும் தீயணைப்பாளா் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் இணைய முகவரியிலும் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.
பயிற்சி வகுப்பு குறித்த தகவல்களை இணைந்து அறிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0462-2532938 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அரசுப் போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.