ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் 2022 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (T NTET) தாள்-IIக்கான கணினி அடிப்படையிலான தேர்வை 03.02.2023 முதல் 15.02.2023 வரை 23 அமர்வுகளில் நடத்தியது. TNTET தாள்-IIக்கான Final Answer key மற்றும் முடிவுகள் 28.03.2023 அன்று வாரியத்தால் வெளியிடப்பட்டது. அப்போது விடைகள் தொடர்பான தேர்வர்களின் ஆட்சேபனைகள் பெறப்பட்டது.
அதன் முடிவில், 15 கேள்விகளைத் தவிர அனைத்து கேள்விகளுக்கும் விடைகுறிப்பில் எந்த மாற்றமும் இல்லை என பரிந்துரைக்கப்பட்டது. தற்போது அந்த 15 கேள்விகளுக்கான பதில்கள் மறு மதிப்பீடு செய்யப்பட்டு திருத்தப்பட்ட முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் 28.03.2023 அன்று வெளியான முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், 2,54,224 தேர்வர்கள் கலந்து கொண்ட இத்தேர்வின் திருத்தப்பட்ட முடிவுகள் மற்றும் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு, சான்றிதழ்கள் பின்னர் TRB இணையதளத்தில் பதிவேற்றப்படும் என்றும், திருத்தம் செய்யப்பட்ட முடிவுகளை TRB இணைத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளுமாறும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Check Result: Official Site
Official Notice: Download Here