HomeBlogஆன்லைன் மூலம் இலவசமாக TNPSC பயிற்சி

ஆன்லைன் மூலம் இலவசமாக TNPSC பயிற்சி

ஆன்லைன் மூலம்
இலவசமாக
TNPSC
பயிற்சி

தமிழகம்
முழுவதும் கொரோனோ தொற்று
காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டு எந்த ஒரு பயிற்சி
வகுப்புகளும் நடத்த
முடியாத சூழ்நிலை உருவானது
அந்த குறையை போகும்
விதமாக தற்போது இணைய
வழி பயிற்சி வகுப்புகளை வேலைவாய்ப்புத்துறை நடத்தி
வருகிறது.

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் Group-2 தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கபட்டது. இந்த பயிற்சி வகுப்பில்
யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம் இந்த வகுப்பிற்கு என்று
தனியாக கட்டணம் ஏதும்
வசூலிக்கப்படாது என்பது
குறிப்பிடத்தக்கது. எனவே
இந்த பயிற்சி வகுப்பை
அனைவரும் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

இந்த
பயற்சி வகுப்பானது தினம்தோறும் காலை 10 மணி முதல்
நண்பகல் 12 மணி வரையிலும்,
மாலை 2 மணி முதல்
4
மணி வரையிலும் நடத்தப்பட
உள்ளன. நீங்கள் இந்த
இந்த இலவச பயிற்சி
வகுப்புகளை CISCO WEBEX என்னும்
இணைய பக்கத்தின் மூலமாகவோ
அல்லது CISCO App மூலமாகவோ
கலந்துக்கொண்டு பயன்பெறலாம். இந்த பயிற்சி வகுப்பில்
அணைத்து விதமான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும் மாதிரி தேர்வு,
அரசு அலுவலர்களைக் கொண்டு
மாதிரி நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படும். இந்த
பயிற்சியில் சேர விரும்பும் நபர்கள் இந்த https://tamilnaducareerservices.tn.gov.in/vle/vle_home
இணைப்பை பயன்படுத்தி பதிவு
செய்துக் கொள்ளலாம்.

இந்த
இணையதள பக்கத்தில் போட்டித்
தேர்வுகளுக்கு உரிய
பாட குறிப்புகள், முந்தைய
ஆண்டு போட்டி தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் என
போட்டி தேர்வுக்கு தேவையான
அனைத்தும் கொண்டு இலவசமாக
பயற்சி வழங்கப்பட்டு வருகிறது.
தேர்வுக்கு தயார் ஆகும்
நபர்கள் இதனையும் பயன்படுத்திக் கொள்ளவும். இந்த பயிற்சியில் பங்கு பெற நீங்கள்
QR Code
பயன்படுத்தி உங்களுக்கு தேவையான
தகவல்களை அனுப்ப வாட்ஸ்
அப் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே
தமிழகம் முழுவதும் உள்ள
போட்டித் தேர்வுக்கு தயாராகும்
நபர்கள் இந்த அரிய
வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொள்ளவும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular