HomeBlogTNPSC Group 4 VAO Notification 2021 – இம்மாதம் வெளியீடு: வயது வரம்பு &...

TNPSC Group 4 VAO Notification 2021 – இம்மாதம் வெளியீடு: வயது வரம்பு & கல்வி தகுதி

TNPSC Group 4 VAO Notification 2021 - Released this month: Age Limit & Educational Qualification

TNPSC Group 4 VAO Notification 2021 – இம்மாதம் வெளியீடு:
வயது வரம்பு & கல்வி
தகுதி

தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணயம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகள் இம்மாதம்
வெளியாகும் என TNPSC சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 பணியிட விவரங்கள்:

TNPSC Group
4
தேர்வு மூலம் இளநிலை
உதவியாளர் (Junior Assistant), தட்டச்சர்
(Typist),
சுருக்கெழுத்து தட்டச்சர்
(Steno-Typist),
கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer),
வரித் தண்டலர்
(Bill Collector),
நில அளவர் (Field Surveyor), வரைவாளர்
(Draftsman)
ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால் VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏

தகுதி: 10ம் வகுப்பு
தேர்ச்சியும், தட்டச்சர்
மற்றும் சுருக்கெழுத்தர் பதவிக்கு
10
ம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு
தேர்வில் தமிழ் மற்றும்
ஆங்கிலத்தில் இளநிலை
அல்லது முதுநிலை தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு
மற்றும் சுருக்கெழுத்தில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு கூடுதல்
வாய்ப்புகள் வழங்கப்படுவது குறிப்பட்ட தக்கது.

வயது:

VAO பதவி
பொதுபிரிவினருக்கு 21 – 30 மற்றும்
பிற வகுப்பினர்களுக்கு 40 வயது
வரை சலுகைகள் உள்ளது.

இளநிலை
உதவியாளர் உள்ளிட்ட மற்ற
பணிகளில்பொதுப் பிரிவினருக்கு 18 – 30 வரையும் மற்றும்
பிற வகுப்பினர்களுக்கு 35 வயது
வரையும் சலுகைகள் உண்டு.
இதில் குறிப்பாக 12ம்
வகுப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு உச்ச
வயது வரம்பு இல்லை.

தேர்வு முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் சான்றிதழ்
சரிபார்ப்பு மூலம் பதவி
கொடுக்கப்படும். இதில்
எழுத்துத் தேர்வு 200 வினாக்களுடன் 300 மதிப்பெண்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு கேள்விக்கும் 1.5 மதிப்பெண்களுடன் 2 பகுதிகளாக கேள்விகள் கேட்கப்படும். தேர்வர்கள் அவர்களுக்கான மொழியை
தேர்வு செய்து தமிழ்
அல்லது ஆங்கிலம் பாடத்தில்
இருந்து கேட்கப்படும் 100 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இவை
அனைத்தும் பொது அறிவை
சார்ந்ததாக இருக்கும். குறிப்பாக
75
பொது அறிவு வினாக்களுடன், 25 திறனறி தேர்வுகள் அனைத்தும்
அப்ஜக்டிவ் வகையில் கேட்கப்படும்.

கட்டணம்:

பதிவு
கட்டணம்ரூ.150/-

தேர்வு
கட்டணம்ரூ.150/-

தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும்
சான்றிதழ் சரிபார்ப்பு மூலம்
தேர்வு செய்யப்படும்

ஊதியம்: தேர்வர்க்கு மாதம்
ரூ.19,500 – 62,000 / – வரை
ஊதியம் வாங்கப்பட உள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு – TNPSC புதிய அறிவுரைகள் :

  • நடைமுறையில் இருந்து
    வரும் One Time Registration 5
    வருடங்களுக்கு மட்டுமே
    செல்லுபடியாகும்.
  • பதிவு விண்ணப்பத்தில் புகைப்படம், கையொப்பம் போன்றவை
    தெளிவாக இல்லை என்றால்
    அவை நிராகரிக்கப்படும்.
  • பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மூன்றாம் பாலின
    (
    பெண்கள்) விண்ணப்பதாரர்கள் பெண்களுக்கான 30% இடஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீதமுள்ள
    70%
    காலிப்பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டில், ஆண்கள் , மூன்றாம் பாலினத்தவர்கள், மூன்றாம் பாலின
    (
    ஆண்கள்) விண்ணப்பதாரருடன் சேர்ந்து
    போட்டியிடத் தகுதியானவர்கள்.
  • பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் போதுமான விண்ணப்பதாரர் இல்லாத
    பட்சத்தில் அந்த இடங்களில்
    ஆண்கள் மற்றும் மூன்றாம்
    பாலின (ஆண்கள்) நிரப்பப்படலாம்.
  • ஆண் விண்ணப்பதாரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட
    மனைவியை உடையவராக இருக்க
    கூடாது.
  • பெண் விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே மனைவியுடன் வாழும் ஒருவரை திருமணம்
    செய்தவராக இருத்தல் கூடாது.
  • பணிக்கு விண்ணப்பிக்கும் போது போதுமான தமிழறிவு
    இல்லாதவராக இருந்தாலும், பணிக்கு
    விண்ணப்பிக்கலாம். ஆனால்
    இரண்டாம் வகுப்பு மொழித்தேர்வில் தமிழில் முழுத்தேர்வு பெற்றிருக்க வேண்டும், தவறினால் அவர்
    பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.
  • தேர்வாணையத்தின் தலைவர்கள்,
    அதிகாரிகள், அலுவலர்கள் போன்றவர்களின் அதிகாரம் அல்லது செல்வாக்கை பயன்படுத்தினால் அவர்
    3
    ஆண்டுகளுக்கு தேர்வு
    எழுத தடை செய்யப்படுவார்கள்.
  • இடஒதுக்கீட்டிற்க்கான சான்றிதழ்,
    கல்வி சான்றிதழ்களை போலியானதாக சமர்பித்தாலும், அவற்றில்
    போலியான திருத்தங்களை செய்திருந்தாலும், அவர்கள் மீது
    நிரந்தரமாக குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • தேர்வர்கள் தேர்வுக்கு வரும் போது மது
    அருந்திவிட்டு வந்தாலும்,
    புகை பிடிப்பவர்கள் போன்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் 3 ஆண்டுகள் தேர்வு எழுத
    முடியாது.
  • ஆள்மாறாட்டம் மற்றும்
    ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
    எடுக்கப்படும்.
  • தேர்வு மையத்தின்
    அனைத்து நுழைவு வாயில்களும் தேர்விற்கு 45 நிமிடங்களுக்கு முன்னதாகவே மூடப்படும். அதன்பிறகு வரும்
    தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇

💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google Printing at 50 paise
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular