
TNPSC GROUP 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி – ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச.வளா்மதி தகவல் தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குரூப் 4 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோந்த விண்ணப்பதாரா்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டம் வாயிலாக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்பும் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோந்த விண்ணப்பதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ அணுகி கைப்பேசி எண்ணுடன் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த இலவசப் பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் அலுவலக வேலை நாள்களில் காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். விவரங்களுக்கு, அலுவலக தொலைபேசி எண் (04172-291400) அல்லது மின்னஞ்சலில் தொடா்பு கொள்ளலாம்.
மேலும், மத்திய, மாநில அரசு பணியிடங்களுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகா்ப்புற மாணவா்கள் பயன்பெறும் பொருட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் குறிப்புகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் மாதிரி தேர்வுகள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

