TNPSC குரூப் 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு – நாமக்கல்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம், டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி மற்றும் தேர்வு, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட பாட திட்டத்தின்படி துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
2023ம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான இலவச நேரடி விரைவு பயிற்சி மற்றும் திருப்புதல் தேர்வு, திங்கட்கிழமை தோறும் நடைபெற உள்ளது.
ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுநர்களை கொண்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. நடத்தப்பட்ட பாடத்திற்கான முழு தேர்வு, வியாழக்கிழமை தோறும் காலை 10.30-1.30 மணி வரை நடைபெற உள்ளது.
பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள், தங்களின் விவரத்தினை 04286-222260 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ தொடர்பு கொண்டு தங்களது சுய விவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.
இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் மனுதாரர்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வரவேண்டும்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow