டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன
கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு குரூப் 4 பதவிகளுக்கான அறிவிக்கையை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த ஜனவரி மாதம் 30ம் தேதி வெளியிட்டது. 6244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஜுன் மாதம் 9ம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில், 18 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை பதவிகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறித்து தேர்வர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன. குரூப்-4 கட் ஆஃப் எவ்வளவு நிர்ணயமாக வாய்ப்பு இருக்கிறது என்பதை இங்கு காணலாம்.
இலக்கணம், இலக்கியத்தில் அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. வழக்கமாக 25 மதிப்பெண்கள் கணக்கு கேள்விகள் கேட்கப்படும். ஆனால் இந்த ஆண்டு 27 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
இதில் 20 கேள்விகள் அனைவராலும் பதிலளிக்க கூடியதாக இருந்தது. சில கேள்விகள் நேரம் செலவு செய்து எழுத கூடியதாக இருந்ததாக ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் தெரிவித்தார்.
பொது அறிவை பொருத்தவரை சுலபமாக இருந்தாலும், ஒரு பத்து கேள்விகள் தரமாக கேட்கப்பட்டிருந்தது. விடை அளிப்பதற்கு சற்று சிரமமாக இருந்திருக்க கூடும்.
தற்போதைய நிகழ்வை பொருத்த கேள்விகள் டிஎன்பிசி தரத்தை தாண்டி எஸ் எஸ் சி போன்ற மத்திய அரசு தேர்வில் காண தரத்தில் கேட்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நாட்டு நடப்புகளையும், செய்தித்தாள் வாசித்தல் பழக்கம் இருப்பவர்களும் இதனை எளிதில் பதிலளிக்க முடியும் என தெரிவித்தார்.
170 மதிப்பெண் அல்லது அதற்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் நிச்சயம் தேர்வில் வெற்றி வாய்ப்பை தரும் என தெரிவித்தார்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow