லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. குரூப் 1 பதவிகளில் காலியாக இருக்கும் 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனவே அதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பணியிடத்துக்கான முதல் நிலை தேர்வு வருகிற நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் தேர்தல் திருவிழா போல போல லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கக்கூடிய குரூப் 4 பதவிகளுக்கான அறிவிப்பு வருகிற நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது. இப்பதவிக்கான எழுத்து தேர்வு அடுத்த ஆண்டு(2024) பிப்ரவரி மாதம் நடத்தப்படும் என அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மாதத்தில் 384 ஒருங்கிணைந்த இன்ஜினியரிங் பணியிடங்களுக்கும், அடுத்த மாதத்தில் (அக்டோபர்) 400 தொழில்நுட்ப பணியிடங்களுக்கும் என 13 வகையான துறை சார்ந்த காலி பணியிடங்களுக்கும் அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
TNPSC Updated Tentative Annual Planner – 2023
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


