TNPSC GROUP 4 ANSWER KEY CHALLENGE
1. மாதிரி வினாத்தாளின் [AAA வரிசை] பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகியவற்றைத் தவிர ஒவ்வொரு வினாவிற்கும், கொடுக்கப்பட்ட விடைகளுள் சரியான விடை √ குறியீடு மூலம் குறித்துக்காட்டப்பட்டுள்ளது.
2. தேர்வின்போது தேர்வர்களுக்கு; எவ்வகையான குறியீட்டைக் கொண்ட வினாத்தாள் வழங்கப்பட்டிருந்தாலும், தற்போது தேர்வாணையத்தின் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாதிரி வினாத்தாள் தொகுப்பில் உள்ள கேள்விகளின் வரிசை எண் படியே தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்க வேண்டும்
3. பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள; மேற்படி வினாத்தாள் தொகுப்பின் பொது அறிவுத்தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களைத் தவிர இதர வினாக்களுக்கான விடைகளுக்கு தேர்வர்கள் தங்களது மறுப்பினைத் தெரிவிக்கலாம். பொது அறிவுத் தாளில் உள்ள வினா எண்கள் 171, 173, 174 ஆகிய மூன்று வினாக்களை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரை செய்ய தேர்வாணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இருப்பினும், தேர்வர்கள் மேற்படி மூன்று வினாக்களுக்கும் அவர்களது கருத்துக்களை தகுந்த ஆதாரத்துடன் தெரிவிக்கலாம்
4. ஆதாரத்துடன் பெறப்படும்; மறுப்புகள் / கருத்துக்கள் ஆகியவை வல்லுநர் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டு விடைகள் இறுதி செய்யப்படும்
5. உத்தேச விடைகளுக்கான; மறுப்புகள் / கருத்துகள் ஆகியவற்றை ஏழு நாட்களுக்குள் இணைய வழியில் மட்டுமே
www[dot]tnpsc[dot]gov[dot]in
மூலமாக தெரிவிக்க வேண்டும்
6. அஞ்சல் வழியாகவோ, மின்னஞ்சல்; வழியாகவோ பெறப்படும் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது
7. 17.09.2019-க்கு பிறகு இணையவழியில் பெறப்படும் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படமாட்டாது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google




