தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர் ஆர். நட்ராஜ் ஐ .பி.எஸ் தலைமையில் “அர்த்தசாஸ்த்ரா” என்ற அமைப்பின் மூலம் இன்று மாலை 4.30 மணிக்கு TNPSC குரூப் 2, குரூப் 4, தேர்வுகளை வெல்வது எப்படி? என்ற தலைப்பில் ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் ச. வீரபாபு பயிற்சியளிக்கிறார்.
ஆன்லைனில் இலவச பயிற்சி:
TNPSC மூலம் 2021 ஆண்டில் குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவர உள்ளது இந்த தேர்வுக்கு எப்படி படித்தால் வெற்றி பெற முடியும்? என்னென்ன ஆதார நூல்களை படிக்க வேண்டும்? எப்படி தயாரானால் இந்த ஆண்டே அரசுப் பணி கிடைக்கும்? போன்ற மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குனர் ச. வீரபாபு விடையளிக்க உள்ளார்.
இன்று மாலை 4.30 மணிக்கு ZOOM செயலி மூலமாக நடக்கும் இந்த நிகழ்ச்சியின் நிறைவாக TNPSC இன் முன்னாள் தலைவர் ஆர். நட்ராஜ் ஐ .பி.எஸ் தலைமை உரை ஆற்ற உள்ளார்.
WHATSAPP ல் முன்பதிவு:
இந்த இலவச பயிற்சியில் பங்கேற்க : ‘TNPSC SUCCESS’ என்று TYPE செய்து 7550151585 என்ற எண்ணுக்கு தங்கள் பெயரை WHATSAPP ல் அனுப்பி முன்பதிவு செய்ய வேண்டும். இன்று மாலை 4 மணிக்குள் முன்பதிவு செய்பவர்களுக்கு ZOOM செயலிக்கான இணைப்பு WHATSAPP மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


