மயிலாடுதுறையில் குரூப் -2 குரூப் -2 ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி இன்று தொடங்கி நடைபெறுகிறது என்று மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா கூறியதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 5,529 பணியிடங்களுக்கான குரூப்-2,குரூப்-2 ஏ தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வருகின்ற 23-ஆம் தேதி ஆகும். மேலும் இதற்கான முதல்நிலைத் தேர்வு வருகின்ற மே மாதம் 21ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்நிலையில் இந்தத் தேர்விற்கு தயாராகும் விதத்தில் மயிலாடுதுறையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக இலவச பயிற்சி வகுப்புகள் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு இணைய வழியாக நடைபெறுகிறது. இதில் மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் இளைஞர்கள் தங்களுடைய பெயர், முகவரி, செல்போன் எண், கல்வித்தகுதி போன்ற விவரங்கள் அனைத்தையும் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். அல்லது 6383489199 வாட்ஸ்அப் எண் மூலமாகவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு 04364 299790 இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். என்று அவர் தெரிவித்துள்ளார். இதில் கலெக்டர் அறிவித்தபடி இன்று காலை 10.30 மணி அளவில் இணைய வழியாக இந்த பயிற்சி வகுப்பு தொடங்க பட்டுள்ளது. இதில் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


