சனிக்கிழமை(பிப்.25) நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தேர்வர்களுக்குரிய பதிவெண்ணுடன் வினாத்தாள் சரியாக அடுக்கப்படாமல் விட்டதே இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
வினாத்தாள் அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட தவறே குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பத்துக்கு காரணம்.
மேலும், வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனம் தனது பணிகளை அவுட்சோர்சிங் செய்ததும் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குழப்பம் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருவதாகவும் டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தோ்வில் பல இடங்களில் வினாத்தாள்கள் மாறியதால் குழப்பம் ஏற்பட்டது. இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா்.
இந்த நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வில் நடந்த குழப்பம் தொடர்பாக டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.
இதனால், தோ்வா்கள் அவதியடைந்தனா். மேலும், வினாத்தாள்கள் திரும்ப பெற்றதும், கால தாமதமாக தேர்வுகள் நடந்துள்ளதும் பெரும் குளறுபடிகளும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சில மையங்களில் உள்ள தேர்வர்கள் வினாத்தாளில் உள்ள கேள்விகளுக்கான விடைகளை தங்களின் செல்போன், புத்தகங்களில் படித்து தேர்வு எழுதியதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
அன்றைய தினம் மதியமே தேர்வை ரத்து செய்யக்கோரி பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அவசர கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் ஆகியோர் நடைபெற்ற இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.