TNPSC., தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்
சார்பில், TNPSC., தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாக, கலெக்டர்
ராகுல்நாத் தெரிவித்தார்.
கலெக்டர் ராகுல்நாத் செய்திக்குறிப்பு:
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்
தொழில்நெறி வழிகாட்டும் மையம்
சார்பில், தமிழ்நாடு அரசு
சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறும் போட்டி தேர்விற்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
நாளை
9ம் தேதி, முதல்
வாரந்தோறும், சனி மற்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில், இலவச
பயிற்சி வகுப்புகள், இம்மையத்தில் நடத்தப்படும்.போட்டி
தேர்வுகளுக்கு விண்ணப்பம் செய்துள்ள, மாவட்டத்தைச் சேர்ந்த
ஆண் மற்றும் பெண்
வேலைநாடுநர்கள் பங்கேற்கலாம்.
பயிற்சியில் பங்கேற்போர், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ அல்லது தொலைபேசி
வாயிலாகவோ தொடர்பு கொண்டு
பதிவு செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, செங்கல்பட்டு, வேண்பாக்கம் ஐ.டி.ஐ.,
வளாகத்தில் உள்ள, மாவட்ட
வேலைவாய்ப்பு அலுவலரை,
044 – 2742 6020
என்ற எண்ணில் அழைக்கலாம்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


