திருவண்ணாமலை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
திருவண்ணா மலை கலெக்டர் பா.முரு கேஷ் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 மற்றும் குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை விரைவில் நடத்த இருக்கிறது.
அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், வரும் 1ம் தேதி முதல் இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்குகிறது.
திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நேரடி வகுப்புகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். இணையவழி வகுப்புகள் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியர்கள் மூலம் வகுப்புகள் நடத்தப்படும். ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். கடந்த ஓராண்டு காலமாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் ஆன்லைன் மூலம் மட்டுமே பயிற்சி வகுப்பு நடந்தது. தற்போது, மீண்டும் நேரடி வகுப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே, போட்டித் தேர்வுக்கு தயாராகும் விருப்பமும், தகுதியும் உள்ள நபர்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் 1ம் தேதி முதல் பயற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். ஆன்லைன் மூலம் பயிற்சி பெற விரும்புவோர் 04175- 233381 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


