தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பல்வேறு துறைகளில், இன்ஜினியரிங் பதவிகளில், 831 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜூலை 2ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் போட்டி தேர்வு நடந்தது.
அதில், 39,538 பேர் பங்கேற்றனர். இவர்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு தேர்வானவர்கள் பட்டியல், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.அதேபோல, தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறையில், ‘செயல் அலுவலர் நிலை – 3’ல், 77 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு செப்டம்பரில் போட்டி தேர்வு நடந்தது.இதில், 35,913 பேர் பங்கேற்றனர். இவர்களில், தேர்ச்சி பெற்றவர்களின் தரவரிசை மற்றும் மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இந்த விபரங்களை, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


