தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் (TNDTE) ஆனது ஆண்டுதோறும் தட்டச்சு தேர்வுகள் நடத்திக் கொண்டு வருகிறது. இந்த ஆண்டு Government technical examinations in commerce subjects february / march 2022 க்கான தேர்வுகள் நடத்த திட்டமிட்ட படி, இந்த தேர்வுகள் Shorthand – high speed examinations, shorthand examinations, accountancy examinations மற்றும் Typewriting போன்ற பாடப்பிரிவுகளுக்காக தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது இத்தேர்வுகள் நடைபெறும் நேரம் மற்றும் தேதிகள் பற்றிய நேர அட்டவணை அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகி உள்ளது.
இந்த அட்டவணையில் Shorthand – high speed தேர்வுகள் 12.03.2022 ம் தேதி முதல் 13.03.2022ம் தேதி வரையும், Limited centre – shorthand தேர்வுகள் 19.03.2022ம் தேதி முதல் 20.03.2022ம் தேதி வரையும், Accountancy தேர்வுகள் 21.03.2022ம் தேதியும், Common centre -Typewriting தேர்வுகள் 26.03.2022 ம் தேதி முதல் 27.03.2022ம் தேதி வரையும், தேர்வுகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் நடைபெறவுள்ள பாடங்கள் மற்றும் நேரம் குறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்தில் உள்ள அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தேர்வுகள் எழுதுவதற்கு காத்திருக்கும் தேர்வர்கள் தங்களின் நண்பர்களுக்கும் இப்பதிவை பகிர்ந்து அவர்களும் பயனடையும் படி, உதவ அறிவுறுத்தப்படுகிறார்கள்.