Home Blog TNDTE தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு 2021

TNDTE தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு 2021

0

TNDTE தட்டச்சு தேர்வு ஒத்திவைப்பு 2021

TNDTE மூலமாக ஆகஸ்ட்‌ 2021ல்‌ நடைபெற வேண்டிய விடுபட்டத்‌ தேர்வு டிசம்பர்‌ 2021லும்‌ மற்றும்‌ 2022-ம்‌ ஆண்டு பிப்ரவரி, ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ நடத்தப்பட வேண்டிய தேர்வுகளுக்கு ஏப்ரல்‌ மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களிலும்‌ தேர்வுகள்‌ நடைபெறும்‌ என முன்னதாக அறிவிப்பு மற்றும் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது.

இந்த அட்டவணையில்‌, 2021ம்‌ ஆண்டு டிசம்பரில்‌ தேர்வு நடத்துவதாக அறிவித்திருந்த திட்ட நிரலிற்கு தமிழகத்தில் உள்ள தட்டச்சு சங்கங்கள் மாணவர்கள் நலன்‌ கருதி டிசம்பர்‌ 2021 தேர்வுகளை ரத்து செய்து வழக்கம்போல்‌ பிப்ரவரி மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ தேர்வுகளை நடத்தும்படி கோரிக்கை வைத்துள்ளனர்‌.

மேலும்‌, கடந்த இரு வாரங்களாக கனமழை காரணமாக மாணவர்கள் முழுமையான பயிற்சியினை மேற்கொள்ள இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு 2021ம்‌ ஆண்டு டிசம்பர்‌ மாதத்தில்‌ நடத்தப்படவிருந்த தேர்வுகள்‌ ரத்து செய்யப்பட்டு வழக்கம்போல்‌ 2022ம்‌ ஆண்டு பிப்ரவரி மற்றும்‌ ஆகஸ்ட்‌ மாதங்களில்‌ தேர்வுகள்‌ நடைபெறும்‌ என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான திருத்திய திட்ட நிரல்‌ அட்டவணையும் தற்போது வெளியாகியுள்ளது. தேர்வர்கள் இவற்றை கீழே உள்ள அறிவிப்பின் மூலமாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.

Official Site: Click Here

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

100
Xerox (1 page - 50p Only)
WhatsApp Group
Exit mobile version