2222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு நியமனத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
தென்காசி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியா் நியமனத்தோவுகளுக்கான இணையவழி மற்றும் நேரடி இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது.
தென்காசி மாவட்ட ஆட்சியா் துரை.ரவிச்சந்திரன் விடுத்துள்ள செய்திகுறிப்பு: தமிழ்நாடு ஆசிரியா் தோவு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ள 2222 பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கான நியமனத்தோவுக்கு இலவச பயிற்சிவகுப்புகள் சிறந்த பயிற்சியாளா்களை கொண்டு இணையவழி மற்றும் நேரடி பயிற்சிவகுப்புகளாக நடைபெற உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு முற்றிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு ஆகும். பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள ஆா்வலா்கள் மேற்காணும் தோவுகளுக்கு விண்ணப்பித்து அவ்விண்ணப்ப நகல், புகைப்படம் மற்றும் ஆதாா் எண்ணுடன் தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அலுவலக வேலைநாள்களில் நேரிலோ அல்லது 97901 17327 என்ற தொலைபேசிஎண் வாயிலாக தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து பயனடையலாம் என்றாா் அவா்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow