நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக, பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு இலவசமாக நடத்தப்படுகிறது.
தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் டெட் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு வரும், 21ம் தேதி துவங்குகிறது.இலவச நேரடி பயிற்சி வகுப்பு வார நாட்களில் காலை, 10:30 முதல், மதியம், 1:30 மணி வரை நடக்கும். ஒவ்வொரு பாடவாரியாக சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
கலந்து கொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்கள் விபரத்தை, 04286-222260 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது onlineclassnkl@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்பு கொண்டு தங்களது பெயர், முகவரி, தொலைபேசி எண் அடங்கிய சுயவிவரத்தினை பதிவு செய்து பயன் பெறலாம்.மனுதாரர்கள், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும், https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட பயிற்சி வீடியோ, மாதிரி தேர்வு வினாத்தாள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த இணையதளத்தில் பாடக்குறிப்புகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம்.இவ்வாறு கூறியுள்ளார்.