தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் (06.02.2024)
திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்.
6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகுந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
அடியக்கமங்கலம், சேமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தாராபுரம் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:
மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, வெள்ளவாவிப்புதூா் மற்றும் கிளாங்குண்டல்.
கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத் தலையூா், மணலூா் மற்றும் பெருமாள்வலசு.
கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம் துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம் மற்றும் ராமபட்டணம்.
வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் பிப்ரவரி 7 ஆம் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: ஆத்துப்பாளையம், அனுப்பா்பாளையம், திலகா் நகா், அங்கேரிபாளையம், பெரியாா் காலனி, அம்மாபாளையம், அனுப்பா்பாளையம்புதூா், வெங்கமேடு, மகாவிஷ்ணு நகா், தண்ணீா்பந்தல் காலனி, ஏ.வி.பி.லே-அவுட், போயம்பாளையம், சக்தி நகா், பாண்டியன் நகா், நேரு நகா், குருவாயூரப்பன் நகா், நஞ்சப்பா நகா், லட்சுமி நகா், இந்திரா நகா், பிச்சம்பாளையம்புதூா், குமரன் காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோயில் பகுதி, சொணபுரி லே-அவுட், ஜீவா நகா், அன்னபூா்ணா லே-அவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்த கேந்திரா பகுதி மற்றும் டிடிபி மில்.
பழையபேட்டை, தச்சநல்லூா் சுற்று வட்டாரங்களில் திங்கள்கிழமை (பிப்.5) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பா திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் காளிதாசன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பழைய பேட்டை, திருநெல்வேலி நகரம், தச்சநல்லூா் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
எனவே, திருநெல்வேலி நகரம் மேலரத வீதி மேற்குப் பகுதிகள், ,தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகா், திருப்பணிகரிசகுளம் , வாகைக்குளம், குன்னத்தூா், பேட்டை ,தொழில் பேட்டை, பாட்டப்பத்து, அபிஷேகப்பட்டி, பொருள்காட்சி திடல், திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பா் நெடுஞ்சாலை, பூம்புகாா் , ஸ்ரீபுரம், சிவந்தி சாலை, சுந்தரா் தெரு, பாரதியாா் தெரு, சி. என். கிராமம், குறுக்குத்துறை , கருப்பன் துறை , திருநெல்வேலி நகரம் கீழரத வீதி, போஸ்ட் மாா்க்கெட் , ஏ. பி. மாடத் தெரு, சுவாமி சந்நிதி தெரு, அம்மன் சந்நிதி தெரு, கள்ளத்தி முடுக்குத் தெரு , நயினாா் குளம் சாலை, சத்தியமூா்த்தி தெரு, போத்தீஸ் , நயினாா்குளம் மாா்க்கெட், வ. உ. சி. தெரு, வையாபுரி நகா், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோயில் தெற்கு தெரு , ராம் நகா் , ஊருடையான் குடியிருப்பு, தச்சநல்லூா், நல் மேய்ப்பா் நகா், விக்னேஷ் நகா், பாலாஜி அவென்யூ, வடக்கு பாலபாக்யா நகா், தெற்கு பாலபாக்யா நகா், மதுரை சாலை, திலகா் நகா், பாபுஜி நகா், சிவந்தி நகா், கோமதி நகா், சிந்து பூந்துறை, மணிமூா்த்தீஸ்வரம், இருதய நகா் சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
தாழையூத்து சுற்று வட்டாரங்களில்…
இதுகுறித்து திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தாழையூத்து துணை மின் நிலையத்தில் திங்கள்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மானூா் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன் புதூா், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூா், தென்கலம் புதூா், நாஞ்சான்குளம், தென்கலம், மதவக்குறிச்சி சுற்று வட்டாரங்களில் மின் விநியோகம் இருக்காது.
உங்களிடம் உள்ள PDF Files XEROX வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow