தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட முக்கிய ஆணையங்கள் தொடர்பான குழு (Committee/Commission), அதன் நோக்கம் (Purpose), உருவாக்கப்பட்ட ஆண்டு (Year) ஆகிய மூன்று முக்கிய தலைப்புகள் அடிப்படையில் இந்த PDF அமைக்கப்பட்டுள்ளது. TNPSC Group 1, Group 2, Group 4, VAO, TNUSRB, TET, TRB, RRB, SSC போன்ற அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் இந்த தலைப்பு அடிக்கடி கேட்கப்படும் முக்கியமான பகுதியாகும்.
| குழு | நோக்கம் | ஆண்டு |
|---|---|---|
| குரியன் ஜோசப் குழு (3 உறுப்பினர்கள்) | மதீதிய மாநில உறவை மறுபரிசீலனை செய்ய | 2025 |
| சத்தியநாராயணன் குழு | மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து ஆராய | 2024 |
| சத்தியநாராயணன் குழு | வேங்கைவயல் சம்பவம் குறித்து விசாரணை | 2023 |
| நீதிபதி கோகுல்தாஸ் ஆணையம் | கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்து ஆராய | 2024 |
| டாக்டர் J ஜெயரஞ்சன் குழு (4 உறுப்பினர்கள்) | மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தைப் பற்றி ஆராய | 2023 |
| நீதிபதி K சந்துரு குழு | பள்ளி, கல்லூரிகளில் சாதி அடிப்படையிலான வேறுபாடுகளை ஒழிக்க | 2023 |
| அரவிந்த் சுப்ரமணியன் குழு (5 உறுப்பினர்கள்) | சரக்கு மற்றும் சேவை வரி (IGST) தொடர்பான பிரச்சனைகளை ஆய்வு செய்ய | 2023 |
| நீதிபதி K சந்துரு குழு (4 உறுப்பினர்கள்) | ஆன்லைன் சூதாட்டத்தின் தீங்கு விளைவுகளை ஆராய | 2022 |
| N சுந்தரதேவன் குழு (13 உறுப்பினர்கள்! | தமிழ்நாட்டில் MSME துறை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராய | 2022 |
| PWC டேவிதார் தாரகுழு | Smart City திட்டங்கள் குறித்து விசாரணை நடத்த | 2022 |
| சுல்தான் அகமது இஸ்மாயில் குழு (7 உறுப்பினர்கள்) | ஹைட்ரோகார்பன் திட்டங்களை ஆராய்வது மற்றும் பிரித்தெடுப்பது குறித்து ஆய்வு செய்ய | 2021 |
| நீதிபதி D. முருகேசன் குழு | ஒரு தனித்துவமான மாநிலக்கொள்கையை வடிவமைப்பதற்கு | 2021 |
| நீதிபதி P கலையரசன் குழு | நீட் தேர்வில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு | 2021 |
| நீதிபதி AK ராஜன் குழு | நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய | 2021 |
| திருப்புகழ் குழு | சென்னை பெருநகரப் பகுதியில் (CMA) வெள்ள அபாயத்தை குறைத்தல் & நிர்வகித்தல் | 2021 |
| C ரங்கராஜன் குழு | கோவிட்-19 க்கு பிறகு இடைக்கால நடவடிக்கை குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்குதல் | 2020 |
| நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் | தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டக் – காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டை விசாரிக்க | 2018 |
| நீதிபதி S ராஜேஸ்வரன் ஆணையம் | ஜல்லிக்கட்டு வன்முறைக்கு பின்னால் உள்ள காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிக்க | 2017 |
| ஆறுமுகசாமி ஆணையம் | முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க | 2016 |
save this link for your future studies.!
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

