அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் TN Career Services Employment YouTube Channel மூலம் கட்டணமில்லா ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 26.01.2026 முதல் 30.01.2026 வரை நடைபெறும் Weekly Class Schedule அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்புகள் TNPSC Group IIA (Mains), RRB NTPC, TNUSRB, ஆசிரியர் தேர்வு, வங்கி தேர்வுகள் உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகளுக்கு பயனுள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. Reasoning, Science, Administration, Maths Question Paper Discussion, MS-Excel போன்ற முக்கிய தலைப்புகளில் தினசரி வகுப்புகள் நடைபெறுகின்றன.
அனைத்து வகுப்புகளும் மாலை 7 மணி முதல் 9 மணி வரை YouTube மூலம் நேரலையாக (Live) அல்லது பதிவாக (Recorded) வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்தி, தங்களுடைய அரசுப் பணி கனவை நனவாக்கலாம்.

🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

