அரசு தொழிற்
பயிற்சி நிலையங்களில் மூன்று
புதிய பாடப்பிரிவுகள்
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் மூன்று புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் திறன்
சார்ந்த படிப்புகள் கற்றுத்
தரப்படுகின்றன. ‘எலக்ட்ரீசியன், பிளம்பா், பெயிண்டா், ‘ஃபிட்டா்’
போன்ற படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தநிலையில் புதிய
படிப்புகளை தொடங்குவது குறித்து,
தொழிலாளா் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு துறை
அமைச்சா் சி.வி.
கணேசன், வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறை இயக்குநா்
வீரராகவராவ் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இதன்படி
நவீன காலத்துக்கு தேவையான
மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கும்
வகையில், ‘மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ரேடியாலஜி டெக்னீசியன், ஏா்கிராப்ட் மெயின்டனன்ஸ்’ போன்ற
படிப்புகளை புதிதாகத் தொடங்க
அமைச்சா் உத்தரவிட்டுள்ளார். விரைவில்
இதற்கான பணிகள் தொடங்கும்
என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
முன்னதாக
சென்னை கிண்டியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையம்,
திருவான்மியூா் தொழில்
மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் உள்ளிட்ட இடங்களில்
அமைச்சா் ஆய்வு மேற்கொண்டதாக வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சி துறை அலுவலகம்
தெரிவித்துள்ளது.