TAMIL MIXER EDUCATION.ன் கல்வி செய்திகள்
பிளஸ் 2, பத்தாம்
வகுப்பு தேர்வில் தேர்ச்சி
பெறாதவா்கள் துணைத் தேர்வுக்கு நாளை முதல் தத்கலில்
விண்ணப்பிக்கலாம்
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்
தேர்வில் தேர்ச்சி பெறாதவா்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை கடைசி
நாளாகும்.
இந்த
வாய்ப்பிலும் விண்ணப்பிக்க இயலாதவா்கள் செவ்வாய்க்கிழமை முதல்
வியாழக்கிழமை வரை
தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
பத்தாம்
வகுப்பு, பிளஸ் 2 பொதுத்
தேர்வு முடிவுகள் கடந்த
ஜூன் 20-ஆம் தேதி
வெளியிடப்பட்டன. பிளஸ்
2 தேர்வில் தேர்ச்சி பெறாதவா்கள் மற்றும் தனித் தேர்வா்களுக்கு ஜூலை 25 முதல் ஆக.1
வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆக.2 முதல் 8 வரையிலும்
துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ்
2 பொதுத் தேர்வில் தேர்ச்சி
பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவா்கள், துணைத்
தேர்வு எழுத கடந்த
ஜூன் 27ம் தேதி
முதல் தாங்கள் படித்த
பள்ளிகளில் விண்ணப்பித்து வருகின்றனா். இந்த அவகாசம் திங்கள்கிழமையுடன் நிறைவுபெறவுள்ளது.
மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க இயலாதவா்கள், ஜூலை 5 முதல் 7 வரை,
கூடுதல் கட்டணம் செலுத்தி,
தத்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப
எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து, அதை வைத்து தேர்வுக்
கூட நுழைவுச் சீட்டு
பெற்றுக் கொள்ளலாம்.
புதிதாக
தேர்வு எழுத உள்ள
தனித் தேர்வா்களும், அரசு
தேர்வுத் துறையின் சேவை
மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
ஏற்கெனவே,
பிளஸ் 1ல் தேர்ச்சி
பெறாத பாடங்களுக்கும், பிளஸ்
2 பாடங்களுக்கும் சோத்து
விண்ணப்பிக்கலாம். துணைத்
தேர்வு அட்டவணை மற்றும்
விதிமுறைகளை இணையதளத்தில் தெரிந்து
கொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here