திருவண்ணாமலை கோயில்
பணியிடங்கள்
–
நீதிமன்றம்
புதிய
உத்தரவு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்
உள்ளிட்ட பணியிடங்களுக்கு தேர்வு
நடவடிக்கையை தொடர உயர்நீதி
மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித்
தலமாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்
தமிழகத்தில் உள்ள சிறப்பு
மிக்க சிவத்தலங்களில் ஒன்றாகும்.
இத்திருத்தலம் விழுப்புரம் காட்பாடி ரயில்
மார்கத்தில் விழுப்புரத்திலிருந்து 65 கி.மீ,
தூரத்திலும் காட்பாடியிலிருந்து 90 கி.மீ
தூரத்திலும் அமைந்துள்ளது. திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று
என்ற பெருமையினையும் கொண்ட
தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும்,
அம்பிகை உண்ணாமுலையாள் என்றும்
அழைக்கப்படுகிறார்.தமிழகத்தில் பிரசித்தி பெற்ற இந்த
கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட
பணிகளுக்கான தேர்வு நடவடிக்கையை தொடர அனுமதி வழங்க
வேண்டும் என உயர்நீதி
மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று அந்த வழக்கு
விசாரணைக்கு வந்தது இந்த
வழக்கில் இந்து சமய
அறநிலையத்துறைக்கு அனுமதி
அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.