Thursday, August 14, 2025
HomeBlogஆன்லைன் கடன் மோசடிகளை தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆன்லைன் கடன் மோசடிகளை தவிர்க்க கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஆன்லைன் கடன்
மோசடிகளை தவிர்க்க கவனத்தில்
கொள்ள வேண்டியவை

கொரோனாவின் வருகைக்கு பிறகு டிஜிட்டல்
வளர்ச்சி விகிதமானது ஒவ்வொரு
துறையிலும் பெரியளவில் வளர்ச்சி
கண்டுள்ளது.

குறிப்பாக
வங்கி துறையில் பற்பல
மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக
உடனடி கடன் பெறும்
பல ஆயிரம் ஆப்கள்
புதியதாக வந்துள்ளன.

இது
ஒரு புறம் மக்களின்
அவசர தேவைக்கு பயன்படும்
விதமாக இருந்தாலும், இதில்
சில மோசடி சம்பவங்களும் அரங்ககேறி வருகின்றன.

வங்கி
வாடிக்கையாளர்கள் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஏகப்பட்ட
நடைமுறைகள் இருப்பதால், வங்கிகளை
நாடுவதை தவிர்த்து, இது
போன்ற உடனடி கடன்
ஆப்களை நாடுகின்றனர்.

இந்த
ஆப்கள் உடனடியாக கடன்
கிடைக்கும் என்ற தூண்டிலை
வாடிக்கையாளர்களுக்கு விரிக்கின்றன. இதனால் பலரும் உடனடியாக
அவசர தேவைக்கு கிடைக்குமே என்ற எண்ணத்தில் மோசடியில்
சிக்கிக் கொள்கின்றனர். இப்படி
மோசடியில் சிக்கிக் கொள்ளாமல்
இருக்க என்ன வழி?
கவனிக்க வேண்டிய விஷயங்கள்
என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட
அறிக்கையின் படி, உடனடியாக
கடன் வழங்கும் 1,100 கடன்
ஆப்களில், 600 ஆப்கள் போலியானது
என வல்லுனர் குழு
தெரிவித்தது. அந்தளவுக்கு மோசடிகள்
பெருகிவிட்டன. இன்றைய
காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் இருந்தாலே போதும். இதன்
மூலம் நிமிடங்களில் கடன்
பெறும் ஆப்சன் வந்து
விட்டது. இதற்காக நாள்
கணக்கில் ஆவணங்களை எடுத்துக்
கொண்டு அலைய வேண்டியதில்லை. இதற்காக பிசிகல் ஆவணங்களும் தேவையில்லை.

நீங்கள்
கடன் வாங்க திட்டமிடும் இந்த ஆப், ஆர்பிஐயின்
அங்கீகாரம் பெற்றதா? முறையாக
பதிவு செய்யப்பட்டதா? அதனை
முதலில் தெரிந்து கொள்ளுங்கள். KYC விதிமுறைகளை சரியாக
பின்பற்றபடுகிறதா? என்பதை
சரி பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி ஏதேனும் சந்தேகம்
எழுந்தால் கடன் வாங்குவதை
தவிர்க்கலாம்.

நீங்கள்
கடன் வாங்க தீர்மானிக்கும் முன்பு அந்த ஆப்களின்
மதிப்புரைகளை (Review) பார்த்து
தெரிந்து கொள்ளுங்கள். அந்த
ஆப் எந்த நிதி
நிறுவனத்தின் மூலம்
செயல்படுத்தப்படுகின்றது. அந்த
நிறுவனம் ரிசர்வ் வங்கியால்
அனுமதிக்கப்பட்டிருக்கிறதா? இந்த
ஆப் அல்லது நிறுவனத்திற்கென பொதுவான இணையதளம் இருக்கிறதா? அதில் என்னென்ன விதிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் முழுமையாக படித்து தெரிந்து
கொள்ளுங்கள்.

நீங்கள்
கடனுக்கு விண்ணபித்து அதனை
இறுதியாக முடிக்கும் முன்பு,
இருக்கும் விதிமுறைகள் மற்றும்
நிபந்தனைகளை படித்து தெரிந்து
கொள்ளுங்கள். சில மோசடியாளர்கள் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை போல இணையம் என
அனைத்து வசதிகள், விதிமுறைகள் என சரியாக வைத்திருப்பார்கள். ஆக கடனுக்கு
விண்ணபித்து இறுதியாக proceed கொடுக்கும் முன்பு விதிமுறைகள் என்ன?
நிபந்தனைகள் என்ன என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

வளர்ந்து
வரும் தொழில்நுட்பம் காரணமாக
ஆப்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆக முடிந்த மட்டில்
அதிகாரப்பூர்வமற்ற ஆப்களை
தவிர்த்திடுங்கள். குறிப்பாக
உங்களது வங்கி விவரங்கள்,
கிரெடிட் கார்டு பின்,
முகவரிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்திடுங்கள். இதனை தவறாக
பயன்படுத்தப்படுவதற்காக வாய்ப்புகள் அதிகம்.

 

சிலர்
கடன் வாங்கும்போது எங்கு
குறைந்த வட்டி என்று
தான் முதலில் பார்ப்பர்.
ஏனெனில் வட்டியை குறைத்து,
கடனை முன் கூட்டியே
செலுத்தினால் அதற்கு
எவ்வளவு கடன், செயல்பாட்டு கட்டணம், என பலவும்
எவ்வளவு என தெரிந்து
கொள்ளுங்கள். ஆக இதன்
மூலமும் பிரச்சனையில் இருந்து
விலகி இருக்க முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments