5 வயதுக்கு உட்பட்ட
குழந்தைகளுக்கு அரசு
பேருந்துகளில் கட்டணம்
கிடையாது
தமிழ்நாடு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து
வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு
உள்பட்ட குழந்தைகள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்கப்படுவா் என்று
போக்குவரத்துத்துறை அமைச்சா்
அறிவித்தார்.
போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வெளியிட்ட அறிவிப்புகள்:
சென்னை
மாநகரப் போக்குவரத்துக் கழகம்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கோயம்புத்தூா்) லிமிடெட்
ஆகிய 3 கழகங்களின் அனைத்து
பேருந்துகளுக்கும் தேசிய
பொது பயன்பாட்டு அட்டையுடன் அனைத்து பொது போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைக்கும் வகையில்
தானியங்கி பயணச்சீட்டு வழங்கும்
முறை, பணபரிவா்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை ரூ.70 கோடி
செலவில் கேஎஃப்டபிள்யு ஜொ்மனி
மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் அறிமுகப்படுத்தப்படும்.
தமிழ்நாடு
அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து
வகை பேருந்துகளிலும் 5 வயதுக்கு
உள்பட்ட குழந்தைகள் இலவசமாகப்
பயணிக்க அனுமதிக்கப்படுவா். தற்போது
3 முதல் 12 வயது வரையிலான
குழந்தைகளுக்கு அரை
கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.
10 சதவீத
தள்ளுபடி: பயணிகள் நீண்ட
தூரப் பேருந்துகளில் பயணிப்பதை
ஊக்குவிக்கவும், தனியார்
பேருந்துகள், ரயில் போன்றவற்றில் பயணிக்கும் பயணிகளை ஈா்க்கவும், விழா நாள்கள் நீங்கலாக
இதர நாள்களில் இணையவழிப்
பயணச்சீட்டு முன்பதிவு வாயிலாக
இருவழிப் பயணச்சீட்டுகள் முன்பதிவு
செய்யும் பயணிகளுக்கு 10 சதவீத
தள்ளுபடி வழங்கப்படும்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


