TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடைப் பண்ணை வளாகத்தில் ஆகஸ்ட் மாதம் 21 ஆகஸ்ட் 2023 திங்கட்கிழமை முதல் 25 ஆகஸ்ட் 2023 வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் தேசிய வேளாண்மை மேம்பாட்டுத் திட்ட நிதியுதவியுடன் கால்நடைகளுக்கான தீவனப்பயிர்கள் சாகுபடி மற்றும் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் தீவனப்பயிர்களின் முக்கியத்துவம், மண்வளங்களுக்கேற்ற தீவனப்பயிர் வகைகள், தானியவகைகள், புல்வகைக்கள், பயறு வகைகள் மற்றும் மரவகைத் தீவனப் பயிர்கள் சாகுபடி தொழில்நுட்பங்கள் பற்றி விரிவாக பயிற்சி அளிக்கப்படும். தீவனப்பயிர்களின் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள், ஊறுகாய்புல் தயாரிக்கும் முறைகள் குறித்து விரிவான தொழில்நுட்ப உரைகள் எடுத்துரைக்கப்படும். மேலும் தீவனப்பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முறைகள் பற்றி விரிவான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள், புத்தகங்கள் மற்றும் தீவன விதைகளும் வழங்கப்படும்.
ஆகையால் இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள், பண்ணையாளர்கள் முன்பதிவு செய்துகொள்ள தொடர்புக்கு 04286266572, 04286266491, 8637472930 மற்றும் 9443696557 என்ற அலைப்பேசி எண்களை அணுகவும், பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்ணை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி, கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடைப் பண்ணை வளாகம், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், நாமக்கல் 637 002.


