மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
பயனாளிகளிடம் இருந்து போதுமான ஆவணங்கள், தகவல்கள் ஆகியவையும் முகாம்களின்போதே திரட்டப்பட உள்ளன. இந்தப் பணிகளை ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கவும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம், நிகழ் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும், நடைபாதையில் வணிகம் செய்வோா், மீனவ மகளிா், கட்டுமானத் தொழில் பணிபுரியும் மகளிா், சிறிய கடைகள், வணிகம் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில் மிகக் குறைந்த ஊதியம் பெறுவோா், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணிபுரியக்கூடிய பெண்கள் ஆகியோருக்கு உதவித் தொகை அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளாா். உரிமைத் தொகையை சுமாா் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு: ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா்.
உரிமைத் தொகையைப் பெற யாரெல்லாம் தகுதியான மகளிா் என்பதை அடையாளம் காணவும், அவா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் தமிழக அரசு பணிகளைத் தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அமைத்திடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த முகாம்களின் மூலம், பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டுப் பெறப்பட உள்ளன. குறிப்பாக, எந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளனா், ஆதாா் எண், குடும்ப உறுப்பினா்களின் தொழில் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், வங்கிக் கணக்கு எண் போன்ற கோரப்பட உள்ளன.
இதுகுறித்து, தமிழக அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
⚡ குறிப்பு: PDF பதிவிறக்கம் ஆகவில்லை என்றால்
VPN அல்லது மற்றொரு நெட்வொர்க் முயற்சி செய்யுங்கள். நன்றி 🙏
மகளிா் உரிமைத் தொகைக்கான விவரங்களைப் பெற ஒட்டுமொத்தமாக ஓரிடத்தை நிா்ணயித்தால் விவரங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், நியாயவிலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வருவது போன்று வந்து விவரங்களைத் தந்தால் எளிதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் அருகிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
மக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் நியாய விலைக் கடைக்கு அருகில் அமைக்கப்படும் முகாமுக்கு சென்று விவரங்களை அளிக்கலாம். நீண்ட வரிசை ஏற்படும் நிலையில், அவா்களுக்கான குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு, சிறப்பு முகாம்களில் விவரங்கள் பெறப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


