TAMIL MIXER EDUCATION-ன்
கல்வி
செய்திகள்
2025க்குள் அனைத்து
குழந்தைகளும் எண்ணறிவு,
எழுத்தறிவை பெரும் வகையில்
திட்டம் அமல்படுத்தப்படுகிறது
எண்ணும்
எழுத்தும் திட்டம் தொடர்பாக
குறைந்தபட்ச செயல் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
2025க்குள்
அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு,
எழுத்தறிவை பெரும் வகையில்
திட்டம் அமல்படுத்தப்படுகிறது. அனைத்து
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி
இயக்குனர் சுற்றறிக்கை மூலம்
அறிவுரை வழங்கினார்.
ஒன்று
முதல் 3ம் வகுப்பு
வரையிலான மாணவர்களுக்கு கற்றல்
வாசித்தல் திறனை அதிகரிப்பதற்காக, எண்ணும் எழுத்தும் திட்டத்தை
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
கொரோனா
காலகட்டத்தில் ஆரம்ப
பள்ளி மாணவர்களுக்கு வாசித்தல்
திறனும், எழுதும் திறனும்
குறைந்துள்ளது. இதனை
களைந்திடும் வகையில், ஒன்று
முதல் மூன்றாம் வகுப்பு
வரையான அரசு மற்றும்
அரசு நிதியுதவி பெறும்
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எண்ணும் எழுத்தும் என்ற
திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி
மூன்றாம் வகுப்பு வரையிலான
குழந்தைகளுக்கு எழுத்துக்களை வாசித்தல், எழுதுதல், வாக்கியங்களை சரளமாக வாசித்தல் ஆகிய
பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
அந்த வகையில் அரும்பு,
மொட்டு, மலர் என்கிற
மூன்று படிநிலைகளில் பயிற்சி
அளிக்கப்படுகிறது.
இதில்
அரும்பு என்கிற படிநிலையில் எண்கள் மற்றும் எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பயிற்சி
அளிக்கப்படும். மொட்டுக்கள் என்கிற படிநிலையில் எண்கள்
மற்றும் எழுத்துக்களை மாணவர்கள்
வாசிப்பதற்கு பயிற்சி
அளிக்கப்படும். மலர்
என்கிற படிநிலையில் சரளமாக
வாக்கியங்களை வாசிக்கும் பயிற்சி அளிக்கப்படும்.
தமிழ்,
ஆங்கிலம் மற்றும் கணிதம்
ஆகிய மூன்று பாடங்களில் இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக ஆசிரியர்களுக்கு பிரத்தியேகமாக பயிற்சி
அளிக்கப்பட்டுள்ளது. இதற்கென
தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனத்தின் சார்பில்
ஆசிரியர்களுக்கு கையேடுகள்
தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. இதற்காக
மாணவர்களுக்கும் பயிற்சி
கையேடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்தத்
திட்டத்தின் மூலம் எழுதுதல்
மற்றும் வாசிக்கும் திறனை
மேம்படுத்துவதன் வாயிலாக
மாணவர்கள் கொரொனா காலகட்டத்தில் இழந்த எழுதுதல் மற்றும்
வாசிக்கும் திறனை மீட்டெடுக்க முடியும் என பள்ளிக்
கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த
நிலையில் எண்ணும் எழுத்தும்
திட்டம் தொடர்பாக குறைந்தபட்ச செயல்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. 2025க்குள்
அனைத்து குழந்தைகளும் எண்ணறிவு,
எழுத்தறிவை பெரும் வகையில்
திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here