ஏப்ரல் 1-ஆம்
தேதி முதல் எந்தெந்த வங்கிகளில் பழைய செக் புக்
செல்லாது
ஏப்ரல்
1-ஆம் தேதி முதல்
புதிய வங்கிகளுக்கான விதிமுறைகள் அமலுக்கு வருவதால் இந்த
எட்டு வங்கிகளில் பழைய
செக் புக் போன்றவை
செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கித்
துறையில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையின் காரணமாக
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க், விஜயா பேங்க்
ஆகிய வங்கிகள் ஒன்றாக
இணைக்கப்பட்டுள்ளது. அதேபோல்
இந்தியாவின் பழமையான வங்கியை
அலகாபாத் வங்கி இந்திய
வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓரியண்டல்
பாங்க் ஆப் காமர்ஸ்
மற்றும் யுனைடெட் பேங்க்
ஆகியவை பஞ்சாப் நேஷனல்
வங்கி யுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சிண்டிகேட் பேங்க் கனரா வங்கி
யுடனும், ஆந்திரா பேங்க்
கார்ப்பரேஷன் பேங்க்
இணைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு
வங்கிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு அதன் வாடிக்கையாளர்கள் இடையே
குழப்பம் நிலவி வருகிறது.
டெபாசிட் பணத்திற்கு ஆபத்து
வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர். அதேபோல் வங்கிகளில் வாங்கிய
கடன் என்ன ஆகும்
என்று பலரும் அஞ்சி
வருகின்றனர், இதில் டெபாசிட்
மற்றும் வாங்கிய கடனில்
எந்த பிரச்சினையும் இருக்காது
என்று வங்கிகள் உறுதியளித்துள்ளது.
ஏப்ரல்
1ம் தேதி முதல்
மட்டும் ஐஎப்சி கோடு
போன்றவற்றில் விதிமுறைகள் அமலுக்கு வரும் என்று
கூறப்பட்டுள்ளது .ஏப்ரல்
1ம் தேதி முதல்
புதிய வங்கி விதிமுறைகள் அமலுக்கு வந்தால் இந்த
எட்டு வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகம்
மற்றும் அவர்களின் பழைய
காசோலை புத்தகம் இனி
செல்லாது. சிண்டிகேட் மற்றும்
கனரா பேங்க் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் ஜூன்
30 வரையில் பழைய காசோலைப்
புத்தகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்
என்று கால அவகாசம்
வழங்கியுள்ளது. மற்ற
வங்கிகள் ஏப்ரல் 1ஆம்
தேதிக்கு முதல் புதிய
காசோலைப் புத்தகத்தை மாற்றியாக
வேண்டும்.