TAMIL MIXER EDUCATION.ன்
அண்ணா பல்கலைக்கழக செய்திகள்
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வுக்கான புதிய
கால அட்டவணை ஆகஸ்ட்
மாத இறுதிக்குள் வெளியாகும்
பொறியியல்
படிப்புகளில் சேர
பள்ளிகள் வாயிலாகவும், மாநிலம்
முழுவதும் சிறப்பு மையங்கள்
வாயிலாகவும் கடந்த 27 ஆம்
தேதி வரை மாணவர்கள்
விண்ணப்பித்து வந்தனர்.
இதுவரை 2 லட்சத்து 11 ஆயிரத்து
115 மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இந்நிலையில் பொறியியல் கல்லூரி கலந்தாய்வுக்காக ஆகஸ்ட் 1 முதல் சான்றிதழ்
சரிபார்ப்பு தொடங்குகிறது. சுமார்
2 லட்சத்து 11 ஆயிரத்து 905 பேருக்கான
சான்றிதழ் சரிபார்ப்பு இன்று
நடைபெறுகிறது. விளையாட்டுப் பிரிவினருக்கான சான்றிதழ்
சரிபார்ப்பு ஆகஸ்ட் 1 முதல்
வரும் இன்று (ஆகஸ்ட்
7) வரை நடைபெறுகிறது.
விளையாட்டு பிரிவுக்கு விண்ணப்பித்த சிபிஎஸ்இ
மாணவர்களுக்கான 2ம்
கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விரைவில் வெளியிடப்படும். இதில் பங்கேற்கும் மாணவர்கள்,
பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம்
பின்பற்ற வேண்டும் என்று
துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மாணவர்களுக்கான தரவரிசை
பட்டியல் ஆகஸ்ட் 8ல்
வெளியிடப்பட்டு, அதன்
பின்னர் ஆகஸ்ட் 16 முதல்
அக்டோபர் 14ம் தேதி
வரை கலந்தாய்வு நடைபெறும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல்
படிப்பில் https://tneaonline.org/
சேர என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில்
இதற்கான கால அவகாசம்
கடந்த மாதம் 19ஆம்
தேதி முடிவடைந்தது.
இருப்பினும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வு
முடிவுகள் கடந்த 22ம்
தேதி வெளியானதால் பொறியியல்
படிப்புகளில் சேர
27ம் தேதி வரை
கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இதனால் கலந்தாய்வு அட்டவணையில் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இதுவரை திருத்தம் செய்யப்பட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியாகாமல் மாணவர்களிடையே குழப்பம்
ஏற்பட்டு உள்ளது. இது
குறித்து உயர் கல்வித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது,
பொறியியல் கலந்தாய்வுக்கான புதிய
கால அட்டவணை விரைவில்
வெளியிடப்படும். அதற்கான
பணிகள் நடந்து வருகிறது
என கூறினார்.
தற்போதைய
தகவலின் படி, பொறியியல்
கலந்தாய்வுக்கான புதிய
கால அட்டவணை ஆகஸ்ட்
மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow