HomeBlogமத்திய அரசின் உதவித் தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன், மொபைல்போன் எண்ணை இணைக்க வேண்டும்

மத்திய அரசின் உதவித் தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணுடன், மொபைல்போன் எண்ணை இணைக்க வேண்டும்

மத்திய அரசின்
உதவித் தொகையை ஆதார்
எண்ணுடன், மொபைல்போன் எண்ணை
இணைக்க வேண்டும்

பொள்ளாச்சி விவசாயிகள், மத்திய அரசின்
உதவித் தொகையை பெறுவதற்கு, ஆதார் எண்ணுடன், மொபைல்போன் எண்ணை இணைக்க வேண்டும்,
என வேளாண் துறை
அறிவுறுத்தியுள்ளது.

மத்திய
அரசின் பிரதம மந்திரி
சம்மான் திட்ட மானிய
நிதியாக, விவசாயிகளுக்கு நான்கு
மாதங்களுக்கு ஒரு
முறை, இரண்டாயிரம் ரூபாய்
வீதம் ஆண்டுக்கு, ஆறாயிரம்
ரூபாய் இடுபொருட்கள் வாங்க
ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.கோவை மாவட்டத்தில், 67,316 விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைகின்றனர். இது வரை, 10 முறை
தவணைத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதில்,
நடப்பாண்டு ஏப்ரல் முதல்
ஜூலை வரையிலான, 11வது
தவணை ஊக்கத்தொகை பெற,
விவசாயிகள் தங்கள் ஆதார்
எண்ணை உறுதிப்படுத்த வேண்டும்.தங்களது
ஆதார் எண்ணுடன், மொபைல்போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள், www.pmkisan.gov.in
என்ற இணையதளத்தில் தங்கள்
ஆதார் எண்ணை உள்ளீடு
செய்து, மொபைல்போனுக்கு வரும்
OTP எண்ணை பதிவிட்டு,
தங்கள் மானிய விபரங்களை
தெரிந்து கொள்ளலாம்.

இதுவரை
ஆதார் எண்ணுடன், தங்கள்
மொபைல்போன் எண்ணை இணைக்காத
விவசாயிகள், அருகில் உள்ள
பொதுசேவை மையத்தை அணுகி,
தங்கள் விரல் ரேகையை
பதிவு செய்து, எண்களை
இணைத்துக் கொள்ள வேண்டும்.இந்த
இரண்டு முறைகளில், தங்களுக்கு பொருத்தமான முறையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு மட்டுமே,
11
வது தவணை மானியத்தொகை விடுவிக்கப்படும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular