போட்டித்தேர்வு மாணவர்களுக்காக வார விடுமுறை நாளிலும்
நூலகம் செயல்படும்
அரசு
போட்டித்தேர்வுகள் நிறைவு
பெறும் வரை வார
விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் மாவட்ட மைய
நுாலகம் செயல்படும் என
கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள
மாவட்ட மைய நுாலகத்தில் கலெக்டர் மோகன் ஆய்வு
மேற்கொண்டார். அப்போது,
நுாலகத்தில் உள்ள வாசகர்கள்
பகுதி, புத்தகங்கள் இருக்கும்
அறை மற்றும் கணினி
பயிற்சி வழங்கும் பகுதி
ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்,
நாள்தோறும் வரும் வாசகர்களின் தேவைக்கேற்ப குடிநீர், கழிவறை
வசதி போதிய அளவு
உள்ளதா என்பதை கேட்டறிந்தார். மேலும், அரசு நடத்தும்
போட்டித்தேர்வுக்கு தயாராகி
வருபவர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது அவர்
கூறுகையில், ‘மாவட்ட மைய
நுாலகத்தில் 300க்கும் மேற்பட்ட
மாணவர்கள் போட்டித் தேர்வுக்காக தயாராகி வருகின்றனர்.
முதல்நிலை
தேர்வுக்கு மட்டுமே புத்தகங்கள் உள்ளன. நேர்காணல் தேர்விற்கு தேவையான புத்தகங்கள் இல்லை
என மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், தாங்கள் படிப்பதற்கு தேவையான மேஜை மற்றும்
நாற்காலிகள் மற்றும் கூடுதலாக
கழிவறை வசதியினை ஏற்படுத்தித் தரவேண்டும் என கேட்டுக்
கொண்டனர்.
மாவட்ட
மைய நுாலகத்தில் போட்டித்
தேர்வுக்காக தயாராகி வரும்
மாணவர்களுக்கு தேவையான
புத்தகங்கள், பெரிய அளவிலான
அட்டை மற்றும் அடிப்படை
வசதிகள் உள்ளிட்டவை ஓரிரு
நாட்களில் செய்து தரப்படும்.அரசு
போட்டித்தேர்வுகள் நிறைவு
பெறும் வரை வார
விடுமுறை நாளான வெள்ளிக்கிழமையும் நுாலகம் செயல்படும்.
மேலும்,
வாரம் ஒருமுறை அலுவலர்கள் மூலம் நுாலகத்தை ஆய்வு
செய்வதுடன், மாணவர்களின் தேவைகள்
அறிந்து வசதிகள் செய்து
தரப்படும்‘ என்றார்.முதல்நிலை
நுாலகர் காசிம், இரண்டாம்
நிலை நுாலகர் இளஞ்செழியன், மூன்றாம் நிலை நுாலகர்கள் ஆரோக்கியம், வேல்முருகன், முருகன்,
இந்திராகாந்தி மற்றும்
அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


