நகை மதிப்பீட்டாளா் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
ஆண்டிபட்டி கூட்டுறவு மேலாண்மை பயிற்சி
நிலையத்தில் நடைபெறவுள்ள நகை
மதிப்பீட்டாளா் பயிற்சியில் சேர தகுதியுள்ளவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஆண்டிபட்டி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீட்டாளா் பயிற்சி
வகுப்பு நடைபெற உள்ளது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும்
பயிற்சி வகுப்பு நடைபெறும்.
பயிற்சி நிறைவில் தமிழ்நாடு
கூட்டுறவு ஒன்றியத்தின் சார்பில்
சான்றிதழ் வழங்கப்படும்.
இந்தப்
பயிற்சியில் சேர 10ம்
வகுப்பு தோச்சி பெற்ற,
18 வயதுக்கு மேற்பட்ட ஆண்
மற்றும் பெண்கள் ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம்
அருகே உள்ள கூட்டுறவு
மேலாண்மை பயிற்சி நிலையத்தில் நேரிலும், தொலைபேசி எண்:
04546244465 ல்
தொடா்பு கொண்டும் விண்ணப்பிக்கலாம்.