பனியன் நிறுவனத்தில் வருடம்
முழுவதும்
பணியாற்றினால் தங்க
மோதிரம்
இலவசம்
கொரோனா
ஊரடங்கு தளர்வுக்கு திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
80 சதவீத தொழிலாளர்கள்தான் பணியாற்றி
வருகிறார்கள். தொழிலாளர்களின் தேவை அதிகம் உள்ளது.
இந்நிலையில் தங்கள் நிறுவனங்களுக்கு தொழிலாளர்களை வரவழைப்பதற்காக பனியன் உற்பத்தியாளர்கள் பல்வேறு
விளம்பரங்கள் மற்றும்
உத்திகளை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பனியன்
நிறுவன உரிமையாளர் ஒருவர்,
அவிநாசி ரோட்டில் உள்ள
ஒரு மரத்தில் ஓவர்லாக்
டைலர் தேவை, வருடம்
முழுவதும் வருபவர்களுக்கு தங்க
மோதிரம் வழங்கப்படும் என
அட்டையில் வித்தியாசமாக விளம்பரம்
செய்திருந்தார்.
ஏற்கனவே
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு வாரம்
தொடர்ந்து வேலைக்கு வந்தால்
2 லிட்டர் பெட்ரோல் இலவசம்
என விளம்பரம் செய்யப்பட்டிருந்த நிலையில், தங்க
மோதிரம் வழங்குவதாக செய்யப்பட்ட விளம்பரம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. சிலர் எதிர்ப்பு
தெரிவித்ததையடுத்து, அந்த
விளம்பரம் தற்போது அகற்றப்பட்டுள்ளது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
இது குறித்து விளம்பரம் செய்திருந்த பனியன்
நிறுவன உரிமையாளர் கூறுகையில்
ஆட்கள்
பற்றாக்குறையால் தொழில்
கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதனால்
தொழிலாளர்களை ஈர்ப்பதற்காக இப்படி ஒரு விளம்பரம்
செய்தேன். இதற்கு தொழில்
துறையினர் சிலர் கடும்
எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த
விளம்பரங்களை தற்போது
அகற்றி விட்டேன் என்றார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram


