பள்ளிகளுக்கான வேலை
நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு
மாணவர்கள்
காலையில் சிற்றுண்டி சாப்பிட
ஏதுவாக அரை மணி
நேரம் ஒதுக்கப்பட உள்ளதாக
பள்ளிக்கல்வித்துறை தகவல்.
தமிழகத்தில் ஆரம்ப மற்றும் நடுநிலைப்
பள்ளிகளுக்கான வேலை
நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளதால் நேரத்தை
மாற்றி அமைக்க முடிவு
என தகவல் கூறப்படுகிறது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை
மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன்
13ஆம் தேதி பள்ளிகள்
திறந்ததும் புதிய நேரம்
அமலுக்கு வருகிறது எனவும்
தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில்
படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி
நேரத்திற்குப் பிறகு
பள்ளி வளாகத்தில் ‘ஸ்போக்கன்
இங்கிலீஷ்‘ வகுப்புகளை நடத்த
பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், அரசு
பள்ளியில் 1 முதல் 5ம்
வகுப்பு மாணவர்களுக்கு காலையில்
சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் திட்டம்
செயல்படுத்தப்பட உள்ளது
என்றும் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும்
தெரிவித்திருந்தார்.
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google


