HomeBlogதமிழகத்தின் புதிய தொழிற்கொள்கையை முதல்வர் வெளியிட்டார்

தமிழகத்தின் புதிய தொழிற்கொள்கையை முதல்வர் வெளியிட்டார்

 

தமிழகத்தின் புதிய
தொழிற்கொள்கையை முதல்வர்
வெளியிட்டார்

தமிழகத்தில் தொழில் நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, தலைமை செயலாளர்
தலைமையில் குழு ஒன்று
அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர்
தெரிவித்திருந்தார்.

அந்த
குழு ஆய்வு செய்து
கொடுக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் வழங்கப்பட்ட புதிய தொழிற்கொள்கையை இன்று
சென்னையில் முதல்வர் எடப்பாடி
பழனிசாமி வெளியிட்டார். அத்துடன்
சிறு குறு மற்றும்
நடுத்தர தொழிற் நிறுவனங்களுக்கான கொள்கையையும் அவர்
வெளியிட்டார்.

5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்து, இருபது லட்சம்
வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொழிற்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்
28,053
கோடி முதலீடுகளை ஈர்த்து
68,775
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிட இன்று மட்டும்
28
நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது என கூறினார்.
மேலும் சென்னையில் 10 இடங்களில்
புதிய தொழில் பூங்கா
மற்றும் தொழிற்பேட்டைகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார் என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular