கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி, தக்காளி மற்றும் பப்பாளி பழத்தில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க வருகிற ஆகஸ்ட் 9, 10 ஆகிய தேதிகளில் பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியில், நோனியில் இருந்து பிளைன், குவாஸ், ஊறுகாய், ஜாம் தயாரிப்பது, தக்காளியில் இருந்து சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, ஊறுகாய் தயாரிப்பு, பப்பாளி பழத்தில் இருந்து ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி உள்ளிட்ட பொருள்கள் தயாரிப்பது பயிற்சி அளிக்கப்படும்.
ஆா்வமுள்ளவா்கள் ரூ.1,770 செலுத்தி பயிற்சியில் பங்கேற்கலாம். இப்பயிற்சி வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தில் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு 94885 – 18268, 0422 – 6611268 என்ற எண்களில் அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.