
10, பிளஸ் 2 முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு ஜவுளித் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்திய பொருளாதாரத்தில் ஜவுளித் தொழில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது. விவசாயத்திற்கு அடுத்து கிராமப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலைவாய்ப்பினை வழங்குவதில் ஜவுளித் துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. நாட்டின் மொத்த ஜவுளி உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும்.
தமிழகத்தில் ஜவுளித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக தமிழக அரசு துணிநூல் துறை, திறன் மேம்பாட்டுக் கழகத்தின் வழிகாட்டுதலின்படி தென்னிந்திய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் மூலமாக 10 மற்றும் பிளஸ் 2 முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு (ஆண்/பெண்) ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிப் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இப் பயிற்சியை பெற விரும்புபவா்கள் https://tntextiles.tn.gov.in/jobs/ என்கிற இணையதள முகவரியில் தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன் பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த விபரங்களுக்கு, மண்டல துணை இயக்குநா், ஜவுளித் துறை, 1ஆ-2/1, சங்கரி பிரதான சாலை,
குகை, சேலம் என்கிற முகவரியில் செயல்படும் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow
🔔 For more updates & free PDFs, join or follow us below 👇
💬 Join WhatsApp 📢 Join Telegram 📸 Follow Instagram ⭐ Add on Google

